தைராய்டு சுரப்பி நம் உடலில் பல்வேறு பணிகளை செய்வது அயோடின் சத்து சரியான அளவில் நமக்கு கிடைத்தால் தைராய்டு சுரப்பி நலமாக இயங்கும். 10ல் 1 பெண் என்ற நிலையில் தைராய்டு பிரச்னை வருகிறது. பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராக்ஸின் ஹார்மோனை தைராய்டு சுரப்பி சுரக்கிறது. இது குறைந்தாலோ அதிகமானாலோ பிரச்னை தான்.
பொதுவாக பெண்களின் பிரசவ காலம், பூப்படைதல், மாதவிலக்கு நேரங்களில் ஒரு பெண் மனதளவில் பாதிக்கப்பட்டால் தைராய்டு பிரச்னை ஏற்படும். சில சமயங்களில் தைராய்டு சுரப்பி வீங்கி பெரிய கட்டியாகி புற்றுநோயாக மாறலாம். தைராக்ஸின் குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டிஸம், அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டிஸம் என்பர். தைராய்டு சுரப்பி சுழற்சி ஏற்பட்டு தைராய்டு கழலை, புற்றுநோய் போன்றவை ஏற்படும்.
ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் உடல் சோர்வு, மலச்சிக்கல், மூட்டுவலி, தோல்வறட்சி, அதிகமான உதிரப்போக்கு காணப்படும்.ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்: தூக்கமின்மை, கண்களில் வீக்கம், உடல் எடை குறைதல் அதிக வியர்வை, அதிக இதய துடிப்பு, ஏற்படும் தைராய்டு பிரச்னையால் பெண்களுக்கு சினைப்பை பாதித்து கருமுட்டை வளர்ச்சி பாதித்து மலட்டுத்தன்மை ஏற்படலாம்.
ஆரம்ப நிலையிலேயே தைராய்டு பிரச்னைகளை கண்டறிந்து சரியான ஹோமியோபதி மருந்துகளைக் கொண்டு நோயாளியின் உடல்வாகு, தனித்தன்மையை ஆய்வு செய்து ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக் கொண்டால் தைராய்டு பிரச்னையிலிருந்து முழுமையாக விடுதலையாகலாம் என டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். மேலும், மருத்துவ ஆலோசனைகளுக்கு மகிழ் ஹோமியோ மருத்துவமனை ஏஜி காம்ப்ளக்ஸ், அசோகா ஓட்டல் அருகில், ஜங்சன் சேலம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.