25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
08 1444306310 milk rava kesari
இனிப்பு வகைகள்

பால் ரவா கேசரி

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்கள் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால், பால் மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள்.

இங்கு பால் ரவா கேசரியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: ரவை – 1/2 கப் சர்க்கரை – 3/4 கப் பால் – 2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை குங்குமப்பூ – சிறிது முந்திரி – 10 உலர் திராட்சை – 10

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும். ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், பால் ரவா கேசரி ரெடி!!!08 1444306310 milk rava kesari

Related posts

கடலை மாவு பர்பி

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

சுவையான அவல் கேசரி- ருசியாக செய்யும் எளிய முறை

nathan

ரசகுல்லா

nathan

அத்திப்பழ லட்டு

nathan

சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

nathan

பப்பாளி கேசரி

nathan

தித்திப்பான மைசூர்பாக்

nathan

சுவையான ரவா கேசரி செய்முறை விளக்கம்.

nathan