27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201608100827165928 Things to look out for when using public Wi Fi SECVPF
மருத்துவ குறிப்பு

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

பொது இடங்களில் இப்படி வை-பை இணைப்பை பயன்படுத்தும்போது அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
இலவச வை-பை, இன்டர்நெட் பிரியர்களுக்கான வரம் என்றுதான் சொல்ல வேண்டும். மால்கள், கபேக்கள், ரெயில் நிலையங்கள் என செல்லும் இடங்களில் எல்லாம் ‘வை-பை’ இணைப்பு இலவசமாக கிடைப்பது கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் பொது இடங்களில் இப்படி வை-பை இணைப்பை பயன்படுத்தும்போது அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வைரஸ் பரவுவது, மற்றவர்களால் வேவு பார்க்கப்படுவது, தகவல் திருடு போவது என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட பொது வை-பை காரணமாக இருக்கிறது. எச்சரிக்கையாக பொது வை-பை வசதியை பயன்படுத்த சில யோசனைகளை பார்க்கலாம்…

* வை-பை இணைப்பு கொடுக்கும்போது அதிக கவனம் தேவை. பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனம்/ இடங்களில் உள்ள வை-பை இணைப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள். நம்பகத்தன்மை இல்லாத இடங்களில் வை-பை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.

* உங்கள் எண், பெயர், மொபைல் மாடல் போன்ற பெயர்களிலேயே பலர் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் கவனமாக இணைப்பு ஏற்படுத்த வேண்டும். கவனக்குறைவாக அறிமுகம் இல்லாத நபருடன் இணைப்பு ஏற்படுத்தினால் அவர்கள் உங்கள் ரகசியங்களை திருட வாய்ப்பு உண்டு.

* சில இடங்களில் வை-பை இணைப்பு பெறுவதற்கு பிரத்தியேக பாஸ்வேர்டு கூட தேவையில்லை. இதுபோன்ற இடங்களில் ஹேக்கர்கள், உங்கள் தகவல்களை எளிதாக இடை மறித்து கையகப்படுத்த வாய்ப்பு உண்டு. இதனால் பணப்புழக்கம் சம்பந்தமான தகவல்கள், நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகள் ஆகியவை திருடுபோகக் கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* விண்டோஸ் இணையதளங்களில் பொது வை-பை இணைப்பு கொடுக்கும் முன்பாக Control Panel > Network and Sharing Center > Change Advanced Sharing Settings என்ற வரிசையில் உள்ளே சென்று Public என்பதற்கு நேராக turn off என்பதை சொடுக்கி ‘செட்’ செய்து கொள்ளுங்கள். இது வை-பை இணைப்பில் இடையில் மற்றவர் நுழைவதை தடுக்கும். மற்ற உலவிகளிலும் கண்ட்ரோல் பேனல்- நெட்வொர்க் பக்கத்தில் இது போன்ற பாதுகாப்பு செட்டிங் வசதிகள் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* பிரத்தியேக வி.பி.என். எண் பயன்படுத்தி வை-பை வசதிக்குள் நுழைவது மிகவும் பாதுகாப்பானது. உங்களது நண்பர்களுக்கு வை-பை சேவையை வழங்கும்போது இந்த வி.பி.என்.எண்ணை பயன்படுத்தலாம். இதனால் வேறு நபர்கள் உங்களது தகவல் பரிமாற்றத்திற்கு இடையில் நுழைய முடியாது. உங்கள் கருவிக்கான வி.பி.என்.எண் ஏற்கனவே அதில் பதிவாகி இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். வி.பி.என்.எண் இல்லாவிட்டாலும் அதை உருவாக்கிக் கொள்ளும் வழிமுறைகளும் உண்டு. சில அப்ளிகேசன்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

* குரோம், பயர்பாக்ஸ், ஒபேரா போன்ற உலவிகளில் HTTPS Everywhere என்ற வசதி இருக்கும். இது நாம் அனுப்பும் தகவல்களை சங்கேத குறியீடுகளாக மாற்றி அனுப்பக் கூடியது என்பதால் பாதுகாப்பு உறுதியாகும். நீங்கள் இந்த உலவிகளை பயன்படுத்தினால், செட்டிங்ஸ் சென்று இதை பதிவு செய்து கொள்ளலாம்.

* இணையத்தில் உலவி முடித்ததும் கண்டிப்பாக ‘லாக் ஆப்’ கொடுத்து வெளியேறுவதை வழக்கமாக்குங்கள்.

* சில வேளைகளில் வை-பை எல்லை முடிவடையும் இடங்களில் பிரவுசிங் செய்ய நேர்ந்தால் “forget the network” என்ற எச்சரிக்கை வரலாம். இதனால் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும். ஆனால் முழுமையாக இணைப்பில் இருந்து வெளிவந்திருக்க மாட்டோம். வை-பை எல்லைக்குள் நுழைய நேர்ந்தால் மீண்டும் தானாக இணைப்பு ஏற்பட்டுவிடும். இதனால் தொல்லைகள் ஏற்படலாம். எனவே கவனமாக வெளியேற வேண்டும்.

* இதுபோன்ற அசவுகரியங்களை தடுக்க Control Panel > Network and Sharing Center என்ற வரிசையில் சென்று Connect automatically when this network is in range என்பதில் உள்ள ‘டிக்’ குறியை அகற்றுங்கள். Wireless Properties என்ற ஆப்சனை சொடுக்கி வையுங்கள். இதனால் வை-பை எல்லைக்குள் நுழையும்போது தானாக இணைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

மேற்கண்ட பாதுகாப்பு வழிகளை கையாண்டால் ‘வை-பை’ உங்கள் ரகசியங்களில் கை வைக்காது. 201608100827165928 Things to look out for when using public Wi Fi SECVPF

Related posts

தொிந்துகொள்ளுங்கள்! காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…

nathan

உங்களுக்கு தெரியுமா இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

தலைவலியா இருக்கா? உங்க லவ்வரோட கைய கொஞ்ச நேரம் பிடிச்சுகங்க! தீராத வலி எல்லாம் தீரும்!

nathan

முதுகு வலி, கழுத்து வலியை குணமாக்கும்

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வைட்டமின்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா

nathan

மனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி? மனநல நிபுணர்

nathan

நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது…?

nathan