28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
atVsc0V
சூப் வகைகள்

பிராக்கோலி தேங்காய்ப்பால் சூப்

என்னென்ன தேவை?

பிராக்கோலி 1,
வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு சுவைக்கேற்ப,
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் 1/2 கப்,
பாலாடை(கிரீம்) 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் 1 (விரும்பினால்),
பூண்டு 2 பல் (விரும்பினால்).

எப்படிச் செய்வது?

பிராக்கோலியை நன்கு சுத்தம் செய்து, கழுவி, பூக்களைப் பிரிக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் வெண்ணெயை இளக்கி பிராக்கோலியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம், பூண்டு சேர்ப்பதானால் அதையும் சேர்த்து வதக்கவும். வதக்கிய பிராக்கோலியிலிருந்து சிறிதை தனியே எடுத்து வைக்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியதும் மைய அரைத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள வெண்ணெயை இளக்கி, சோளமாவு சேர்த்து நிறம் மாறாமல் வறுக்கவும். பிறகு, அரைத்த விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். தேங்காய்ப்பால் சேர்த்து சின்னத்தீயில் வைத்து, 2 நிமிடம் வரை வைத்து, அடுப்பை அணைத்து, கிரீம் சேர்த்து நன்கு கலக்கவும். தனியே எடுத்து வைத்த பிராக்கோலியை மேலே தூவி சூடாகப் பரிமாறவும்.atVsc0V

Related posts

டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

nathan

வல்லாரை கீரை சூப்

nathan

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan

கொத்தமல்லித்தழை சூப்

nathan

நாட்டுக்கோழி ரசம்

nathan

தக்காளி பேசில் சூப்

nathan

பீட்ரூட் சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

நூடுல்ஸ் சூப்

nathan