தாமதமான திருமணம், தாமதித்த கருத்தரிப்பு போன்றவை பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை
புற்றுநோயும் பெண்களும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 46 சதவீதம் பேர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாமதமான திருமணம், தாமதித்த கருத்தரிப்பு போன்றவை பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களாகும்.
புற்றுநோயால் அவதிப்படும் இந்தியப் பெண்களில் 2 சதவீதம் பேர் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 16 சதவீதம் பேர் 30- 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் 28 சதவீதம் பேர்.
இந்த எண்ணிக்கை, எச்சரிக்கை மணியை அடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்று நோயால் பாதிக்கப்படும் பல பெண்கள், அந்த நோய் நிலைமை தாங்கமுடியாத நிலைக்கு வரும் வரை, குணப்படுத்த முடியாது போகும் வரை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.
எனவே பெண்கள் மத்தியில், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதும், புற்றுநோய் மரணங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசர அவசியம் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.