25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201608051411347315 how to make egg noodles SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்
தேவையான பொருள்கள் :

நூடுல்ஸ் – 150 கிராம்
முட்டை – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
குடமிளகாய் – 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை – சிறிது

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும். நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, குடமிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து மூன்று மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி சுருள வதங்கியதும் குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

* பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சோயாசாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

* வதக்கியவற்றை கடாயில் ஓரமாக ஒதிக்கி வைத்து விட்டு மற்றொரு புறத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

* முட்டையை நன்றாக கிளறி பொடிமாஸ் மாதிரி செய்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கிளறவும்.

* பெரிய கடாய் இல்லையென்றால் மற்றொரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு முட்டையை சேர்த்து தனியாக கிளறி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

* இப்போது நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

* கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும்.

* சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி. 201608051411347315 how to make egg noodles SECVPF

Related posts

அவல் கிச்சடி

nathan

கேழ்வரகு கொழுக்கட்டை

nathan

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்!…

sangika

சுவையான பாசிப்பயிறு குழிப்பணியாரம்

nathan

மீல் மேக்கர் கட்லெட்

nathan

பனீர் குடைமிளகாய் பராத்தா

nathan

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan