28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201608051031446762 Ladyfinger curd pachadi SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி

வெண்டைக்காயில் தயிர் பச்சடி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி
தேவையான பொருள்கள் :

வெண்டைக்காய் – 100 கிராம்
தயிர் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு

அரைக்க :

தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் – 1
சீரகம் – 1 தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் – 1/4 பங்கு
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* வெண்டைக்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும்.

* தேங்காய், சீரகம், மிளகாய் வத்தல் மூன்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், உப்பு சேர்த்து கிளறவும்.

* வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* தண்ணீர் வற்றி வரும் போது தயிரை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

* சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.201608051031446762 Ladyfinger curd pachadi SECVPF

Related posts

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

nathan

ரவைக் கிச்சடி

nathan

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

அரட்டிப்பூவு போஸா

nathan

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

nathan

மெக்ஸிகன் டா கோஸ் (Mexican Taccos)

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan

உருளைக்கிழங்கு மசாலா போளி செய்ய சிரமப்பட வேண்டாம் இதோ……..

nathan