27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201607291200586061 Simple exercises to reduce fat in the lumbar region SECVPF
உடல் பயிற்சி

இடுப்புப் பகுதி கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

கொழுப்பைக் குறைக்க முயலும் போது, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.

இடுப்புப் பகுதி கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் இறங்கும் போது, பலரும் அடிவயிறு, தொடை, பிட்டம் மற்றும் கைகளில் உள்ள கொழுப்பைத் தான் குறைக்க முயல்வார்கள். கொழுப்புக்கள் அடிவயிற்றிற்கு அடுத்தப்படியாக இடுப்புப் பகுதியில் தான் அதிகம் தேங்கும். கொழுப்பைக் குறைக்க முயலும் போது, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.

இங்கு இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க உதவும் சில எளிய உடற்பயிற்சிகள் பார்க்கலாம்.

பலரும் புஷ்-அப் கைகளுக்கு ஓர் நல்ல வடிவமைப்பைக் கொடுக்க மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் புஷ்-அப் செய்வதால், இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புக்களும் தான் கரையும். ஆகவே உங்கள் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு தினமும் தவறாமல் புஷ்-அப் செய்யுங்கள்.

சைடு புஷ்-அப் செய்வதன் மூலமும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம். அதுவும் இது பக்கங்களும் 30-45 நொடிகள் இருக்க வேண்டும். இப்படி 3 செட் செய்ய வேண்டும்.

அடுத்ததாக ஃபிட்னஸ் பந்து பயிற்சி இடுப்பில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும். அதற்கு படத்தில் காட்டியவாறு ஃபிட்னஸ் பந்தின் மையப்பகுதியில் மார்பு பகுதி இருக்குமாறு சாய்ந்து, கைகள் பக்கவாட்டில் நீட்டி, குனிந்து மார்பு பகுதியை மேலே தூக்கவும். இப்படி 15 முதல் 20 முறை என இரண்டு செட் செய்ய வேண்டும்.

கார்டியோ பயிற்சிகளான வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், சைக்கிளிங் போன்றவற்றை தினமும் 30 நிமிடம் செய்து வருவதன் மூலம், இடுப்பு பகுதியில் மட்டுமின்றி, உடலின் அனைத்து பகுதியிலும் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம்.201607291200586061 Simple exercises to reduce fat in the lumbar region SECVPF

Related posts

தொடை பகுதியை வலுவாக்கும் 2 பயிற்சிகள்

nathan

பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள்

nathan

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சி

nathan

உங்களது இளமையை ஏழாண்டுகள் நீட்டிக்கும், அரை மணிநேர நடைப்பயிற்சி!

nathan

எடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி?

nathan

பெண்களின் தோள்பட்டை, கைகளுக்கான பயிற்சி

nathan

எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படி

nathan

ஃபிட்னஸ்ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம்!…

sangika

முதுகுத்தண்டை வலுவாகும் சிங்கிள் லெக் பயிற்சி

nathan