30.6 C
Chennai
Sunday, Jul 13, 2025
carrot
ஆரோக்கிய உணவு

கேரட் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா….!

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

1. கண் பார்வை அதிகரிக்கும்
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது.

இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.

2. என்றும் இளமையாக
கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.

இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.

இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.

உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.

3. மாரடைப்புக்கு குட்பை
கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன.

கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும்.

இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.

4. புற்று நோய்க்கு தடா
கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர்.

எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

5. பள பள பற்கள்
கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும்.

கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.

இனி தினமும் ஒரு கேரட் கடிக்கலாம் தானே!carrot

Related posts

உங்களுக்கு தெரியுமா பேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம்?

nathan

சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான ஓட்ஸ் புட்டு

nathan

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர்

nathan

மாங்காய் கருப்பட்டி ஜூஸ்

nathan

குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடலாமா?

nathan

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள் தெரியுமா?

nathan

ஒழுங்கில்லாத மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க சிறந்த தீர்வு!..

sangika

ஹெல்த் ஸ்பெஷல்! நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan