25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
18 1463567559 9 public hair1
oth

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?

தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர்.

மேலும் உடலில் வளரும் முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது.

ஆனால் மிகவும் மென்மையான பகுதியான பிறப்புறுப்பில் வளரும் முடியை எப்போதுமே ஷேவிங் செய்யக்கூடாது என்பது தெரியுமா? ஏனெனில் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

காரணம் #1 பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று இருக்கும் மற்றும் தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

காரணம் #2 பிறப்புறுப்பை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும். மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும்.

காரணம் #3 பிறப்புறுப்பை ஷேவிங் செய்வதால், அவ்விடத்தில் சீழ் பிடித்த பருக்கள் அதிகம் வரக்கூடும்.

காரணம் #4 பிறப்புறுப்பில் வளரும் முடி, உடலுறவினால் இனப்பெருக்க உறுப்பு மருக்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

காரணம் #5 பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியில் உள்ள இயற்கை எண்ணெய், இயற்கை உயவுப்பொருளாக செயல்படும்.

காரணம் #6 முக்கியமாக பிறப்புறுப்பில் வளரும் முடி நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவும்.

காரணம் #7 பெண்கள் தொடர்ச்சியாக பிறப்புறுப்பு பகுதியை ஷேவ் செய்து வந்தால், பெண்குறியின் இதழ்கள் தொய்வுறும்.

காரணம் #8 பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் பாலியல் நோய்களின் தாக்கம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் வேகமாக தாக்கும்.

குறிப்பு இருப்பினும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி உங்களுக்கு தொந்தரவாக இருப்பின், ட்ரிம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் பாதுகாப்பை வழங்கும் ஓர் வழியும் கூட. 18 1463567559 9 public hair1

Related posts

அவசியம் படியுங்கள் ! விந்தணு உற்பத்தியை அதிகரித்து, வித்தகனாக மாற்ற உதவும் ஒரு அற்புத இலை!

nathan

சொந்த ஊரில் புது வீடு கட்டும் மணிமேகலை ஹுசைன்….

nathan

சுவாரஸ்சியா தகவல்! கர்ப்ப கால தாம்பத்தியம் ஆபத்தானதா..? ஆரோக்கியமானதா?

nathan

விந்தணுவிற்கு ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்!

nathan

ரட்சிதாவை விவாகரத்து செய்ய தயாராகும் தினேஷ்..

nathan

இத படிங்க! விந்தணு பற்றாக்குறையை பற்றி அந்த பின், அதை எப்படி அதிகரிப்பது

nathan

இவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.

sangika

ஆண்களின் மன அழுத்தம் விந்தணு உற்பத்தியை பாதிக்குமா?

nathan

முருங்கை விதை விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யுமா?

nathan