30.7 C
Chennai
Sunday, Jul 19, 2026
சிற்றுண்டி வகைகள்

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். சத்து நிறைந்தது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு
தேவையான பொருட்கள் :

இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 1 கப்,
பாதாம், வேர்க்கடலை, வால்நட் எல்லாம் சேர்ந்து – 1/2 கப்,
பேரீச்சம் பழங்கள் – 13,
நெய் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – சிறிதளவு.

செய்முறை :

* ஓட்ஸை வெறும் கடாயில் 5 நிமிடம் நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* கொடுக்கப்பட்டிருக்கும் பருப்புகளையும் இதே போல் அரைக்கவும்.

* பேரீச்சம் பழங்களை தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* இவை அனைத்தையும் கலந்து நெய் சேர்க்கவும்.

* பின்னர் உருண்டைகளாக பிடிக்கவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

* குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு இது.

Related posts

தினை சோமாஸ்

nathan

நேத்துக் கொட்டுமா பச்சடி

nathan

மீல்மேக்கர் வடை

nathan

சாமை கட்லெட்

nathan

ரஸ்க் லட்டு

nathan

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்

nathan

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

nathan