29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3734
சிற்றுண்டி வகைகள்

டோஃபு கட்லெட்

என்னென்ன தேவை?

சோயா பனீர் (Tofu) – 250 கிராம்,
உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது,
சில்லி சாஸ், மிளகுத் தூள்,
உப்பு – தேவைக்கு,
பிரெட் துண்டுகள் – 6,
மேலே தூவுவதற்கு கருப்பு உப்பு அல்லது சாட் மசாலா,
பொரிப்பதற்கு எண்ணெய்.

எப்படிச் செய்வது?

டோஃபுவை பெரிய நீளத்திற்கு (விரல் வடிவில்) வெட்டி வைத்துக் கொள்ளவும். அதன் மத்தியில் கத்தி கொண்டு கீறி சில்லி சாஸை பைப் செய்யவும். அனைத்து டோஃபுவையும் அப்படியே செய்யவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசையவும். இத்துடன் பிரெட் துண்டுகளை தண்ணீரில் முக்கி எடுத்து கெட்டியாக பிழிந்து கிழங்குடன் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை கைகளால் உருண்டைகள் செய்து விருப்பமான வடிவில் தட்டி அதன் உள் டோஃபு துண்டுகளை வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து வெட்டி தட்டில் பரப்பி வைத்துக் கொள்ளவும். அதன் மேல் சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும்.sl3734

Related posts

சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

சத்தான கோதுமை ரவா தோசை

nathan

திணைஅரிசி காய்கறி உப்புமா

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

பிரெட் ஸ்விஸ் ரோல்

nathan

பிரெட் பீட்சா

nathan

சுவையான பாஸ்தா பக்கோடா

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்

nathan