என்னென்ன தேவை?
பான் கேக்குக்கு…
மைதா – 2 கப்,
பால் – 1/2 கப்,
எண்ணெய் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத் தூள் – 1 சிட்டிகை,
தண்ணீர் – 2 கப்.
ஃபில்லிங்குக்கு…
பாலக் கீரை (அரிந்து வேகவைத்தது) – 1 கப்,
நறுக்கிய காளான் – 1 கப்,
பொடியாக அரிந்த ஓரிகானோ – 1/4 கப்,
துருவிய பனீர் – 100 கிராம்,
சீஸ் – 1/2 கப்,
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1 கப்.
ஒயிட் சாஸுக்கு…
வெண்ணெய் – 50 கிராம்,
மைதா – 1 கப்,
பால் – 2 கப்,
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு, சீஸ் – தேவைக்கு.
பேக்கிங்குக்கு…
எண்ணெய், தக்காளி சாஸ்,
மிளகாய் சாஸ், சீஸ் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பான்கேக்…
மைதா, உப்பு, பால், எண்ணெய், மிளகுத் தூளை தண்ணீருடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.
ஃபில்லிங்…
வெண்ணெயை உருக்கிவெங்காயம், காளான் சேர்த்து வதக்கவும். அத்துடன் பனீர், கீரை, ஓரிகானோ, உப்பு, மிளகுத் தூள், துருவிய சீஸ் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே சிறிது நேரம் கலக்கவும்.
ஒயிட் சாஸ்…
அடி கனமான கடாயில், மிதமான தீயில் வெண்ணெயை லேசாக உருக்கவும். மைதாவைச் சிறிது சிறிதாகத் தூவி வறுத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது சிறிதாகப் பாலைச் சேர்த்து, கட்டியாகாமல், கைபடாமல் சேர்த்துக் கிளறவும். இத்துடன் உப்பு, மிளகுத் தூள், துருவிய சீஸை சேர்க்கவும்.
பேக்கிங்…
ஒரு தட்டில் சிறிதுஎண்ணெய் தடவி, பான்கேக்கை வைக்கவும். அதன் மத்தியில் ஃபில்லிங் வைத்து தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் சிறிதளவு ஊற்றி, சுருட்டி மடிக்கவும். சுருட்டிய பான்கேக்குகளை ஒரு அலுமினிய பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவிய பின், வரிசையாக அடுக்கி வைக்கவும். பான்கேக்குகளின் மேல் ஒயிட் சாஸைப் பரப்பி, தக்காளி சாஸையும், மிளகாய் சாஸையும் பரவலாக ஊற்றி, 180°Cல் 15 நிமிடங்கள் வைக்கவும். துருவிய சீஸைக் கடைசியில் தூவி அந்தச் சூட்டிலேயே அவனில் வைக்கவும். சுடச்சுடப் பரிமாறவும்.