29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201607201300118922 epilepsy women pregnancy SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?

சிக்கலான பிரசவத்தை உண்டாக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது வலிப்பு நோய்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?
சிக்கலான பிரசவத்தை உண்டாக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது வலிப்பு நோய். வலிப்பு நோயினால் கருவுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாவிட்டாலும் சில வேளைகளில் குழந்தைக்கு உடல் ஊனமும் கர்ப்பிணி உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம். வலிப்பு நோயுள்ள பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

நமது உடலை மூளையும் நரம்பு மண்டலமும்தான் இயக்குகின்றன. மூளையில் சிறுமூளை, பெருமூளை, மூளைத்தண்டு ஆகிய பாகங்கள் உள்ளன. பெருமூளை நடுவில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இடது பக்க உறுப்புகளை வலப்பக்க பெருமூளையும் வலப்பக்க உறுப்புகளை இடப்பக்க பெருமூளையும் இயக்குகின்றன.

நடுமூளையின் நரம்புகள் தண்டுவடத்தின் வழியாக உடல் தசைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். நரம்புகள் மூலமாக உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து செய்திகள் கடத்தப்பட்டு அவற்றுக்கு ஏற்ப உடல் தசைகள் செயல்படுகின்றன. இந்த இயல்புக்கு மாறாக ஒருவருக்கு கட்டுப்பாடின்றி தசைகள் தாமாகவே இயங்கித் துடிப்பதுதான் வலிப்பு எனப்படுகிறது.

வலிப்பு சிலருக்கு ஆண்டுக்கு ஒருமுறை, மாதத்துக்கு ஒருமுறை வரலாம். சிலருக்கு தினமும் வருவதும் ஒரே நாளில் பலமுறை வருவதும் உண்டு. அடிக்கடி வலிப்பு வருபவரின் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். சில நேரம் உயிருக்கே ஆபத்தாகலாம். சிறுவலிப்பு நோயின்போது நோயாளி திடீரென சுய நினைவின்றி ஒரே இடத்தில் முறைத்துக்கொண்டு நிற்பார்.

மீண்டும் சுயநினைவுக்குத் திரும்புவார். ஆனால், கீழே விழுந்து புரளமாட்டார். பகுதி வலிப்பின்போது வாய் ஒரு பக்கமாக கோணிக் கொள்ளும். ஒரு கை, ஒரு கால், கட்டை விரல் ஆகியவை மட்டும் தொடர்ந்து துடிக்கும். கண்களில் ஏதோ ஒரு தோற்றம் தெரிவதாகவும், துர்நாற்றம் வருவதாகவும், பயமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறுவார்.

பரிசோதனைகள்

குழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில் வேறு எவருக்கேனும் உள்ள பாதிப்பு, போதை மருந்தை உட்கொள்ளும் பழக்கம், குடல் புழுக்கள், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், இதய பாதிப்பு போன்ற நோய்களின் போதும் வலிப்பு வர வாய்ப்பிருப்பதால் எந்த காரணத்தால் வலிப்பு வந்தது என்பதை ஈசிஜி, எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதித்துக் கொள்ளலாம். தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் இருந்தால் மூளைக்கட்டியால் வலிப்பு வருவதை உணர்ந்து கொள்ளலாம்.

வலிப்பு வரக்கூடிய பெண்கள் கர்ப்பம் தரித்தபிறகு இதன் பாதிப்பு தீவிரமாவதை உணர்வார்கள். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும் சிலருக்கு பிறவிக் குறையுள்ள குழந்தை, குறை பிரசவம், எடை குறைந்த குழந்தை, மூளைக் கோளாறுடைய குழந்தைஆகியவை பிறக்கக்கூடும்.

கர்ப்பக் காலத்தின் பிற்பகுதியில் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடும் போது வலிப்பு மீண்டும் வந்தால் பிள்ளைப்பேற்றினால் வரும் வலிப்பா அல்லது வேறுவிதமான வலிப்பா என வேறுபடுத்தி அறிய முடியாமல் போகலாம்.வலிப்பு வரும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரை அணுகி முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வலிப்பு வரும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.201607201300118922 epilepsy women pregnancy SECVPF

Related posts

கர்ப்பிணிகள் டீ மற்றும் காபி குடிப்பது நல்லதா?

nathan

கர்ப்ப கால டிராபோபோலிக் நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்.

nathan

தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

nathan

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

nathan

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

30 வயதுக்கு மேல் குழந்தை பெறுவோர் கவனத்துக்கு…

nathan

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள்

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika

கர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க

nathan