25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201607181048478832 How to make tapioca puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி

சுவையான சத்தான மரவள்ளிக் கிழங்கு புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள்

மரவள்ளிக் கிழங்கு – அரை கிலோ
தேங்காய் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதனை துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய மரவள்ளிக்கிழங்கை போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். 15 நிமிடம் கழித்து அதனை பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

* புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

* புட்டு குழலை எடுத்துக் கொண்டு, அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிது துருவிய தேங்காயைப் போட்டு, பின் சிறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என அடுத்தடுத்து போட்டு குழலை நிரப்ப வேண்டும்.

* பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி!!!201607181048478832 How to make tapioca puttu SECVPF

Related posts

சுவையான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

பனீர் பாஸ்தா

nathan

கோதுமை மசாலா சிப்ஸ் செய்முறை விளக்கம்

nathan

முட்டைகோஸ் செட் ரொட்டி

nathan

வாழைப்பழ அப்பம்

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய பக்கோடா

nathan