இடுப்பு பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறைக்க இந்த பயிற்சி உதவும்.
இடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்
இந்த பயிற்சியை செய்பவர்கள் அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியை பயன்படுத்த வேண்டும்.
இரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்கு பின்புறம் பிடித்தபடி நிற்கவும். குச்சியை பிடித்து கொண்டு வலது கை, வலது காலை தொடுவது போல் வளைத்து திரும்பவும் பழைய நிலைக்க வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்ய வேண்டும்.
இரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப்பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.
பலன்கள்..
இடுப்பு பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்பு பகுதியில் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்து விடும்.