DSCN0988
ஆரோக்கிய உணவு

கம்பு உணவு நோய்களுக்கு நிவாரணி! உணவே மருந்து !!

சமீபகாலமாக பொதுமக்கள் மத்தியில் மாற்று மருத்துவம், இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம். ஆனால் யோசித்துப்பார்த்தால் தெரியும்.. இந்த விழிப்புணர்ச்சி வர என்ன காரணம் என்று. அலோபதி மருந்துகளும், நவீன விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட மரபணு மாற்ற உணவுகள் மற்றும் ரசாயன கலப்பு மிக்க நவீன தலைமுறை உணவுகளையும் உட்கொண்டு அதனால் புதிது புதிதாக அறிமுகமாகிய நோய்கள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுத்திய பயமே இந்த விழிப்புணர்ச்சிக்கு காரணம்…

எது எப்படியோ… கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்றில்லாமல் இந்த அளவிலாவது ஏற்பட்ட விழிப்புணர்ச்சி நிச்சயம் வரவேற்கத்தக்கதே.

உணவுச்சத்து தரத்தில் முதலிடம் : நமது முன்னோர்கள் பலநூறாண்டு காலம் தேடி, ஆராய்ந்து கண்டுபிடித்து, செயல்படுத்தி, பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்ந்த வாழ்க்கை முறையை கைவிட்டு விட்டு நாம் ஏன் நவீனத்தின் பின்னால் பயணிக்க ஆரம்பித்தோம் என்பதையும் இந்த நேரத்தில் சற்று உற்று நோக்குவது ஒரு தெளிவான அணுகுமுறையை, மாற்றத்தை கொண்டு வரும்.

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

நோய்களுக்கு நிவாரணி: தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம். வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும். வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும். கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும். அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும் நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள். அனைத்து கம்பு உணவுகளையும் மண்சட்டியில் செய்தால் சுவைகூடுவது மட்டுமில்லாமல் உடலிற்கும் மிகவும் நல்லது.DSCN0988

Related posts

மனம் அழுத்தம் மற்றும் சோர்வை போக்க !இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்க

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan

சூப்பர் டிப்ஸ்!உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது இப்படி செய்தால் சுவை கூடும்..!

nathan

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!

nathan

கறிகாய்களினுடைய சத்தோ உடலில் சிறிதும் சேரவில்லை. இது ஏன்?????? எப்படிச் சமைத்தால் உடலுக்கு நல்லது?

nathan

சத்து மாவு உருண்டை

nathan

உங்களுக்கு தெரியுமா மெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்…

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க… அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள நட்சத்திர பழத்தின் நன்மைகள்….!!

nathan