29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201607180706525956 men health help Hygrophila Auriculata SECVPF
ஆரோக்கிய உணவு

ஆண்களுக்கு அதிக சக்திதரும் நீர்முள்ளி பால்

நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஆண்களுக்கு அதிக சக்திதரும் நீர்முள்ளி பால்
நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த சக்தியை தரும் ஆற்றல்கொண்டது.

உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் விசேஷ குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.

ரத்தசோகை ஏற்படும்போது உடல் வீங்கும். அதிக சோர்வு தோன்றும். மேல் மூச்சு வாங்குதல் மற்றும் இளைப்பு ஏற் படும். அப்போது நீர்முள்ளி குடிநீர் தயாரித்து 100 மி.லி. வீதம் தினம் காலை, மாலை இருவேளை குடித்துவரவேண்டும். குடித்தால், வீக்கம் குறைந்து உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடல் பலமடையும். நீர் முள்ளி ரத்த சோகையை போக்கும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடலில் வாதத்தன்மை தோன்றும்போது மூட்டுவலி ஏற்படும். இந்த வலியை போக்கி, மூட்டுகளுக்கு அதிக உறுதியை கொடுக்கும் ஆற்றலும் நீர்முள்ளி குடிநீருக்கு உள்ளது. இது, உடல் உள்உறுப்பு வீக்கங்களையும் போக்கும்.

நீடித்த வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறவர்கள், அரை தேக்கரண்டி நீர்முள்ளி விதை பொடியை 200 மி.லி. மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் பருகினால் நோய் குணமாகும்.

நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள்கொண்டு வரும். உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளிலும் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது. விதை மட்டுமின்றி அதன் வேரும், இலையும்கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.

நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.201607180706525956 men health help Hygrophila Auriculata SECVPF

Related posts

தேங்காயை அரைக்காமலேயே இலகுவாக‌ கெட்டியான‌ தேங்காய்ப்பால் எடுப்பது எப்படித் தெரியுமா!இத படிங்க!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! வயிற்றுபுண்ணை குணமாக்கும் அத்திக்காய்.. பொரியல் செய்வது எப்படி?

nathan

இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பூண்டுப்பால் அருந்துவதனால் என்ன பலன் தெரியுமா? படியுங்க….

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு சமையலில் செய்ய வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் !

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாவு புளித்துவிட்டதா?.. புளிப்பை மட்டும் தனியாக பிரிக்க இதை மட்டுமே செய்யுங்கள்..

nathan

சூப்பர் டிப்ஸ் அதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா….?

nathan

இந்த கோடைகால பழம் உங்க இதயத்தையும், சிறுநீரகத்தையும் நன்றாக பாதுகாக்குமாம்…

nathan