28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
How to make a sweet ellu urundai SECVPF
இனிப்பு வகைகள்

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

சுட்டீஸ்களுக்கான சத்தான உணவுகளில் எள்ளு உருண்டை மிகவும் எனர்ஜி தரக்கூடியது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

எள்ளு – 200 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

* வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிய பின் மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பாகை விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்).

* பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சற்று சூடாக இருக்கும் போதே கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும்.

* சுவையான தித்திப்பான எள்ளு உருண்டை ரெடி.

குறிப்பு: வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது. இதை கருப்பு எள், வெள்ளை எள் இரண்டிலும் செய்யலாம்.How to make a sweet ellu urundai SECVPF

Related posts

பன்னீர் பஹடி

nathan

ப்ரெட் ஜாமூன் : செய்முறைகளுடன்…!

nathan

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

nathan

ரவை அல்வா

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

ஜிலேபி

nathan

ரசகுல்லா

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: அராபிய சிறப்பு இனிப்பு வகைகள்

nathan

சுவையான தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய…!!

nathan