கால்கள், இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைந்த இந்த ஆசனம் உதவியாக இருக்கும்.
கால்கள், இடுப்புக்கு வலிமை தரும் பத்ம சயனாசனம்
செய்முறை :
விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். இப்படி அமர்ந்த நிலையில் உடலை அப்படியே பக்கவாட்டில் வலதுபுறம் சாய்த்து வலது முட்டிக் கையை தரையில் ஊன்றி கை விரல்களால் தலையின் வலப்புற கன்னம், காதுகளை தாங்கியபடி படுக்கவும்.
பின்னர் இடது காலை நேராக தூக்கவும். இடது கையால் இடது கால் கட்டை விரலை பிடிக்கவும். ஆனால் கால் முட்டியை மடக்க கூடாது. இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு அடுத்த காலிலும் செய்யும். இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யவும்.
பயன்கள் :
உடல் மேல் நோக்கிய பிறை சந்திரன்போல் அமைவதால் நாற்பதாயிரம் நரம்புகள் வரை தூண்டப்பட்டு மன அமைதி கிடைக்கும். உடல் உஷ்ணம் தணியும். ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.