25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kanchiiii
​பொதுவானவை

மட்டன் கீமா நோன்பு கஞ்சி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :

மட்டன் கீமா – 150 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் – முக்கால் டம்ளர்
பாசிப்பருப்பு – இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
கேரட் – அரை துண்டு
ப.மிளகாய் – ஒன்று
மிளகாய் தூள் – அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
தேங்காய் – இரண்டு பத்தை
பட்டை கிராம்பு, ஏலம் – தலா ஒன்று
வெந்தயம் – கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிது
புதினா – சிறிது

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.

* புதினா, கொத்துமல்லி, ப.மிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை இல்லாமல் வடித்து வைக்க வேண்டும்.

* கேரட்டை துருவி வைக்க வேண்டும்.

* அரிசி, பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.

* குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.

* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)
* அடுத்து அதில் தக்காளி ப.மிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.

* தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.

* தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும், பருப்பையும் தண்ணீரை வடித்து போட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து 5 விசில் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவேண்டும்.

* ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவை இறக்கி பரிமாறவும்.

* சுவையான மட்டன் கீமா நோன்பு கஞ்சி தயார். kanchiiii

Related posts

திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம்

nathan

வெஜ் கீமா மசாலா

nathan

சூப்பரான பூசணிக்காய் கறி

nathan

ஓம பொடி

nathan

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

nathan

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

nathan

காராமணி சுண்டல்

nathan

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

nathan

சுவையான பக்வீட் பக்கோடா

nathan