26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201607011315374501 Teenage male hormone secreted by the body faster SECVPF
மருத்துவ குறிப்பு

டீன் ஏஜ் ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்

உடலுறவின் போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

டீன் ஏஜ் ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்
ஆண், பெண் என பாலினம் வேறுபடுவதே நம் உடலில் உள்ள குரோமோசோம்களில்தான். பெண்கள் எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம் வகையையும் ஆண்கள் எக்ஸ் ஒய் (XY) குரோமோசோம் வகையையும் சேர்ந்தவர்கள். ஒரே இன குரோமோசோம் வகையைக் கொண்ட பெண்கள், இயற்கையிலேயே ஆண்களைவிட அதிக வலிமை உடையவர்கள். இதனால்தான், ஆண்களை நோய்கள் எளிதில் தாக்குகின்றன. தவிர, மருத்துவ, சமூகரீதியான காரணங்களும் உண்டு. மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம்.

ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண் இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். பெண்கள் வயதுக்குவந்து விட்டால், அம்மாவோ, உறவினர்களோ அவர்களுடைய பாலியல் சந்தேகங்களை மேம்போக்காகத் தீர்த்துவைக்கின்றனர். ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள், பாலியல் விஷயங்களை, நண்பர்களின் மூலம் அரைகுறையாகத் தெரிந்துகொள்வதால், பாலியல் பற்றிய தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர்.

இந்த வயதில், இளம்பெண்களைக் கண்டால் ஒருவித ஈர்ப்புவரும். இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத்திலேயே, வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இந்தத் தருணத்தில், குடும்பம், நண்பர்கள் சரியாக அமையாதபட்சத்தில் கடுங்கோபம், விரக்தி, தன்னைப் பற்றிய அதீத சுய மதிப்பீடு ஆகியவை அதிகரிக்கிறது.

இதனால், திருட்டு, வன்முறை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு எனத் தவறான திசையில் பயணிக்க நேரிடும். பாலியல் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறுகிறார்கள். அழகான பெண்களைப் பார்க்கும்போது, புத்தகங்கள், வலைத்தளம், திரைப்படங்கள் மூலமாக மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் போது, இயல்பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன் வேகமாகச் சுரக்கும்.

இதனால் ஆண்களின் உறுப்புகள் எழுச்சியுறும். சிந்தனைகள் காமம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தன் உடல், தன் அந்தரங்க உறுப்பில் விந்து வெளியேறுவதில் வரும் சந்தேகங்கள், முறையான சுய இன்பம் பற்றிய கேள்விகள் என ஆண்களின் டீன் ஏஜ் பருவம் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது.

மேலும் இன்டர்நெட்டில் பாலியல் படங்களை பார்த்து தவறான வழியில் செல்லவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆண்கள் தங்களது பாலியல் சந்தேகங்களை தீர்த்து கொள்ள இன்டர்நெட் சிறந்தது என்று தவறாக நினைக்கிறார்கள்.

இதை எப்படி சரிப்படுத்துவது, கடந்து வருவது, இயல்பாக எடுத்துக்கொள்வது என்பது பற்றிய முறையான பாலியல் கல்வி தேவை. தற்போதைய சூழ்நிலையில் நகரத்தில் வாழும் ஆண்களுக்கு 60 – 65 சதவிகிதம் மட்டுமே விந்தணுக்களில் அடர்த்தி இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மேலும் உடலுறவின் போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரியான வழிகாட்டுதல், புரிதல் இன்மையே இதற்குக் காரணம்.201607011315374501 Teenage male hormone secreted by the body faster SECVPF

Related posts

வயதானலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இதை முயன்று பாருங்கள்!

nathan

”வளர்த்தியில்லாம போய், அதனாலயே பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா, வெந்தய லேகியம் பண்ண…

nathan

படுக்கைப் புண்கள், நோய்களை போக்கும் கானா வாழை

nathan

உங்களுக்கு கழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா?

nathan

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டது ஏன்?

nathan

கருத்தரிப்பதை பாதிக்கும் மனஅழுத்தம்

nathan

ஆண்களின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் வழிமுறைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக பராமரிப்பு: இந்த ஊட்டமளிக்கும் சமையல் உங்கள் பீன்-வடிவ உறுப்புகளுக்கு சிறப்பாக செயல்பட உதவும்..!!!

nathan