25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pasda
அசைவ வகைகள்

இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!

தேவையானவை:

இரால் – 10(வரட்டியது)
மக்ரோனி – 3 கப்
பீன்ஸ்- 5
உருளைகிழங்கு – 2 சுமாரானது
வெங்காயம் – பாதி பெரியது
தக்காளி – 2 சிறியது
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
பூண்டுவிழுது – 1 தேக்கரண்டி
கருவா – ஒரு துண்டு
ஏலம் – 2
புதினா இலை – சிறிது
கருவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி இலை – சிறிது
பச்சைமிளகாய் – 3
மஞ்சள்தூள்- சிறிது
மிளகுதூள் – 1 தேக்கரண்டி
சோம்புதூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தாளிப்புக்கு
தேங்காய் பால் – 3 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.சிறிது வெங்காயம்,தக்காளியை தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.
உருளைகிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
பீன்ஸை நீளதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மக்ரோனியை போட்டு சிறிது உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம் போட்டு தாளித்து பின் வெங்காயம்,கருவேப்பிலை,தக்காளி போட்டு வதக்கவும்.பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கி,தயிர்,புதினா இலையை சேர்க்கவும்.
பின் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,பீன்ஸ்,உருளைகிழங்கு சேர்த்துகிளறி,மஞ்சள்தூள்,மிளகுதூள்,சோம்புதூள்,உப்பு, சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
காய்கறிவெந்ததும் வரட்டிய இரால், தேங்காய்பால் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கழித்து இரால் காய்கறி உடன் சேர்ந்ததும் வேகவைத்த மக்ரோனியை சேர்த்து கிளறவும் தீயை மிதமானதாக வைக்கவும்.எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.pasda

Related posts

சுவையான இறால் குழம்பு

nathan

சிக்கன் ரோஸ்ட்

nathan

முட்டை குருமா

nathan

நாசிக்கோரி

nathan

கடாய் பன்னீர் கிரேவி

nathan

யாழ்ப்பாண முறையிலான ஆட்டிறைச்சி குழம்பு சமையால்

nathan

சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

nathan

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

nathan