22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
201606281159205008 How to make more nutritious wedges rice SECVPF
சைவம்

சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. பயன்கள் நிறைந்துள்ள குடைமிளகாயை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாதம் – 2 கப்
வெங்காயம் – 2
சிறிய குடைமிளகாய் – 3 (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 3 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயம், குடை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லி, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் போன்றவற்றை வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து, கரம் மசாலாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய பின் குடைமிளகாய் மற்றும் உப்பை போட்டு குடைமிளகாய் அரை பதம் வரை வதக்கவும். குடை மிளகாய் நன்றாக வெந்தால் நன்றாக இருக்காது.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

* பிறகு அதில் சாதத்தை கலந்து மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

* இப்போது சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!

* இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். 201606281159205008 How to make more nutritious wedges rice SECVPF

Related posts

நார்த்தங்காய் சாதம்

nathan

உருளைக்கிழங்கு குருமா

nathan

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

தவா மஸ்ரூம் ரெசிபி

nathan

சிக்கன் பொடிமாஸ்

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

nathan

முளைகட்டிய பயிறு அகத்திக்கீரை சுண்டல்

nathan

பூண்டு வெங்காய குழம்பு

nathan