26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
201606290925391918 how to make Prawn Pepper Fry SECVPF
அசைவ வகைகள்

ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி

கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இறால் உணவுகளை செய்வது மிகவும் எளிமையானது. இப்போது ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

இறால் – 600 கிராம்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* மிக்சியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடிப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 15 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது.

* இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் இறால் பெப்பர் ப்ரை ரெடி.

* இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.201606290925391918 how to make Prawn Pepper Fry SECVPF

Related posts

சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு

nathan

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

nathan

சைனீஸ் ப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான ஹரியாலி முட்டை கிரேவி

nathan

நாசிக்கோரி

nathan

மீன் வறுவல்

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

முட்டை கொத்து பரோட்டா (Muttai Kothu Parotta)

nathan