26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201606281436394597 Special Ramadan at home how to make delicious Haleem SECVPF
அசைவ வகைகள்

ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி

ரம்ஜான் ஸ்பெஷலான சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி
ஹலீம் என்பது மட்டனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு. பெரும்பாலும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் அதிகம் சமைக்கப்பகிறது. அதிலும் குறிப்பாக ரம்ஜான் நோன்பு காலங்களில் இதை செய்வார்கள். சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த ஹலீம் ரம்ஜான் காலங்களில் சென்னையில் பல இடங்களில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பார்லி – தலா ½ கப்
கோதுமை ரவை – ½ கப்
மட்டன் கீமா – 1 கிலோ
நசுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 2½ லிட்டர்
நெய் – கால் கப்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
வெந்தயத்தூள் – கால் ஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
தாவர எண்ணெய் – 125 மில்லி (½ கப்)
வெங்காயம் – 2
கரம்மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சைபழச்சாறு – 2

செய்முறை :

* எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பார்லியை நன்றாக கழுவி முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து கொள்ளவும்.

* கோதுமை ரவையை 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

* அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானவுடன் அதில் பருப்பு வகைகள், கோதுமை ரவை, மட்டன் கீமா, பூண்டு, இஞ்சி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 மணி நேரம் வேக விடவும்.

* மேலும் அடிக்கடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேரும் படி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

* அடுத்து அதில் நெய், மஞ்சள் தூள், வெந்தயத்தூள், தனியா தூள், சீரகத்தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மேலும் 1 மணி நேரம் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமான தீயிலேயே இருக்க வேண்டும்.

* இது திக்கான பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து அதில் தாவர எண்ணெய் ஊற்றி பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி அதை கலவையில் போட்டு மேலும் 15 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* சுவையான ஹலீமை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் மீதமுள்ள வெங்காயம், சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.201606281436394597 Special Ramadan at home how to make delicious Haleem SECVPF

Related posts

கடாய் பன்னீர் கிரேவி

nathan

மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி…..

sangika

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

nathan

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan

ஆஃப்கானி சிக்கன் புலாவ்: ரம்ஜான் ரெசிபி

nathan

கொங்கு நாட்டு கோழி குழம்பு

nathan

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய தெரியுமா….?

nathan

சூப்பர் ஆட்டுக்கால் மிளகு குழம்பு : செய்முறைகளுடன்…!

nathan

பட்டர் சிக்கன்

nathan