26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201606280816118550 Tips to be younger than the age of thirty SECVPF
இளமையாக இருக்க

முப்பது வயதிற்கு மேல் இளமையாக இருக்க டிப்ஸ்

முப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும்.

முப்பது வயதிற்கு மேல் இளமையாக இருக்க டிப்ஸ்
அதனை அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது போலத்தான் தோற்றம் கொண்டுள்ளனர். உதற்கு காரணம் சரும பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வே காரணம். நல்ல ஆரோக்கியமான உணவுடன், அழகையும் பராமரித்துவந்தால் இளமையாக இருக்கலாம்.

இளமையாக இருப்பவர்களிடன் போய் சோதித்துப் பாருங்கள். அவர்கள் நிறைய நீர் குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஒருவகையில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களும், இறந்த செல்களுமே வயதான தோற்றத்தை தரும். அவற்றை தினமும் வெளியேற்றிவிட்டால் சருமம் இளமையாகவே இருக்கும்.

வீட்டிலேயே இயற்கை முறையில் பப்பாளி, முட்டை, தேன் என பயன்படுத்தினால் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல், இறுக்கமான சருமத்தைப் பெற்று தொய்வடைவதிலிருந்து பாதுகாக்க முடியும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்தால் போதும்.

சர்க்கரை, கடலை மாவு, பயிற்றம் மாவு போன்ற இயற்கையான ஸ்கர்ப்பினால் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுங்கள். இவை சருமத்தை முதிர்ச்சி அடையாமல் காக்கும்.

என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்துதான் உறுப்புக்கள் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் இருக்கும். ஆகவே இரண்டு வகையிலும் பயன் தரும் சருமத்தை ஆரோக்கியமான உணவினாலும் உங்கள் அழகை வெளிக் கொண்டு வர முடியும். ஆகவே நல்ல உணவுகள் உடற்பயிற்சியை தவறாமல் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்கும் முதுமை அடையச் செய்யும். ஆகவே சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போக வேண்டாம். இயற்கையான ஹெர்பல் சன் ஸ்க்ரீன் லோஷன் நல்லது.

இரவுகளில் சருமத்திற்கு போஷாக்கு தரும் க்ரீம்களை தடவலாம். க்ரீம்தான் தடவ வேண்டுமென்பது இல்லை. ஆலிவ் எண்ணெய், பால் க்ரீம், தேங்காய் என்ணெய் ஆகியவற்றை தடவினால் இரவில் வெகு நேரம் எண்ணெய் சருமத்தில் ஊடுருவி, மெருகூட்டும்

முப்பதுகளில் சருமத்தில் வறட்சி தோன்ற ஆரம்பிக்கும். ஆகவே சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நிறைய நீர் குடித்தும் மாய்ஸ்ரைசரை உபயோகித்தும் சருமத்தில் வறட்சி ஏற்படுத்தாமல் காத்திட வேண்டுவது முக்கியம். வீட்டில் இருக்கும், பால், தேன், பாதாம் ஆகியவை சருமத்திற்கு போஷாக்கு அளித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கும்.201606280816118550 Tips to be younger than the age of thirty SECVPF

Related posts

சூப்பர் டிப்ஸ்! எந்த நாளில் என்ன கலர் சட்டை அணியலாம்?!

nathan

பெண்கள் உங்கள் உடம்பை ஸ்லிம்மாக அழகாக வைத்துக் கொள்வது எப்படி?

nathan

62 வயதிலும் ஜாக்கிஜான் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார்?

nathan

தொடர்ந்து 10 நாட்கள் ஸ்பூன் மசாஜ் செய்தால் இளமையை மீட்கலாம் !!

nathan

வயதானாலும் அழகு, இளமை, ஆண்மையுடன் இருக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்???

nathan

40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

nathan

முதுமையை முறியடிக்கும் முந்திரி,beauty tips in tmil

nathan

இளமையை தக்கவைக்கும் இந்தியாவின் பாரம்பரிய அழகு சாதனப் பொருட்கள்!

nathan

தொங்கும் மார்பகங்களை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்!

nathan