25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
201606251034424509 Newly married women want to be with her husband SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்கள் திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க விரும்புவார்கள்

திருமணம் ஆகும் முன்னரே, பெண்களுக்கு தங்கள் கணவனாக வரப்போகும் நபர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கும்.

பெண்கள் திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க விரும்புவார்கள்

201606251034424509 Newly married women want to be with her husband SECVPF

expectations new wife on their husband

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் இப்படி தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் இருந்தால் தாங்கள் சந்தோசமாக இருப்போம் என பெண்கள் சில விஷயங்களை முன்வைத்திருக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.

பசங்க வேலை, பொண்ணுங்க வேலை என்று பேதம் பார்க்க கூடாது. சமையலாக இருந்தாலும், சரி, துணி துவைப்பதாக இருந்தாலும் சரி உடன் உதவி செய்ய வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

வேலை இடத்தில் இருக்கும் டென்ஷனை தங்கள் மீது காண்பிக்கக் கூடாது. இது எங்களை மனதளவில் எவ்வளவு பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் தங்கள் மீது ஓர் அரவணைப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் தங்கள் மீது ஒரு சதவீதம் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

திறந்த மனதுடன் பேசுகிறேன் என சொல்லி, மனம் வந்தும்படி பேசக் கூடாது. சில விஷயங்கள் நீங்கள் தமாஷாக பேசினாலும், அந்த வார்த்தை மனைவியை எவ்வளவு வேதனை படுத்தும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கல்யாணம் ஆகிவிட்டது என்ற பொறுப்பு இருக்க வேண்டும். குடும்ப தலைவன் என்பது போல இருக்க வேண்டும். குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எந்த ஒரு விசயம் செய்வதாக இருந்தாலும் மனைவியுடன் சேர்ந்து கலந்து ஆலோசித்து செய்ய வேண்டும்.

நண்பர்களுடன் மட்டும் நேரம் செலவழிக்காமல், மனைவிக்காகவும், குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். உங்களை போல நாங்களும் தோழிகளுடன் ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவு வந்தால் கதவு திறந்து விடுவீர்களா? என்பது போன்ற கேள்விகளை மனைவிகள் கேட்காமல் இருக்க அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒருமுறை கால் அட்டன்ட் செய்து முக்கியமான விஷயமாக இருந்தால் அதை மனைவியிடம் தெரிவித்து விடுவது நிம்மதி. நீங்கள் தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்குள் ஏற்படும் பயத்தை சற்று யோசித்து பாருங்கள்.

Related posts

சித்தர்களின் ஹைக்கூ… சித்தரத்தை!

nathan

ஆண்களே தலையில் திடீர் வலுக்கையா? இந்த கொடிய நோயாகவும் இருக்கலாம்!

nathan

கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான சில எளிய வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… இந்த உணவுகள் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் எனத் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா அன்னாசி பூவை வைத்து மாதவிலக்கை முறைப்படுத்த முடியும்

nathan

காலையில் எழுந்ததுமே சோர்வா இருக்கா..?

nathan

வெங்காயம் – பாதம் வைத்தியம்…!

nathan

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு ஏற்படும் ஒமிக்ரான் தொற்று:அறிகுறிகள் என்னென்ன?

nathan