26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 10 1462881010
தலைமுடி சிகிச்சை

பொடுகு தொல்லை இனி இல்லை, இந்த இயற்கை ஷாம்பூ பயன்படுத்துங்க!

எல்லாருக்கும் கூந்தல் அடர்த்தியாய் போஷாக்காக வேண்டும் என்ற ஆசை உண்டு. விதவிதமாய் சிகை அலங்காரம் பண்ணிக்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் நிறைய காரணங்களால் கூந்தல் வலுவிழந்து , வளராமல் பொலிவின்றி காணப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தேயிலை எண்ணெய் ஒரு வரப்பிரசாதம்.

எதனால் முடி உதிர்கிறது?

உடலில் போதிய ஊட்டச்சத்து இல்லை என்றால் , கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை உபயோகிப்பது, கலரிங் செய்வது, ஹார்மோன் மாற்றங்கள் , சரியாக பராமரிப்பில்லாமல் இருத்தல் என சொல்லிக் கொண்டே போகலாம்.
நீங்கள் கடையில் வாங்கும் ஷாம்புவை விட, வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கூந்தலை பராமரிப்பது எளிது, விலையும் குறைவு.பக்க விளைவுகளற்றது.அதற்கு தேயிலை எண்ணெயில் செய்யப்படும் இந்த ஷாம்பு சிறந்த தீர்வு தருகிறது.

தேவையானவை:

தேயிலை எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
கேஸ்டைல் லிக்விட் சோப் -2 ஸ்பூன்.
தேயிலை எண்ணெய் நிறைய அழகு சாதன பொருட்களில் உபயோகப்படுத்தப் படுகிறது. சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஃப்ரண்ட்லியானது. கிருமிகளை அழிக்கும்.
ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் சிறந்த நிவாரணம் தருகிறது.

லிக்விட் கேஸ்டைல் சோப் என்பது ஆலிவ் எண்ணெய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் நீர்த்த சோப்பாகும்.இதில் சிறிதும் கெமிக்கல் கலப்பது இல்லை. இதனை வீட்டிலேயே செய்யலாம் அல்லது சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும்.

இந்த இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இயற்கையான இந்த ஷாம்பு தயார்.இதனை தலையில் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து சில நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும்.பின் நன்றாக முடியை அலாசவும். வாரம் 2 அல்லது 3 முறை உபயோகித்தால் பொடுகு எட்டிக் கூடப் பார்க்காது.4 10 1462881010

Related posts

கூந்தல் : பொடுகைப் புரிந்து கொள்ளுங்கள்…

nathan

கூந்தல்

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் இயற்கை மசாஜ் – தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண்களே! உங்களுக்கு ஏன் முடி அதிகம் கொட்டுதுன்னு தெரியுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…

nathan

பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… அப்ப இத படிங்க!

nathan

பொடுகு தொல்லைக்கு தீர்வு தரும் வெங்காயச்சாறு

nathan

முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan

தினமும் தலை முடியை அலசுபவர்களா நீங்கள்? பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

nathan

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா? உபயோகமான ரெசிபி!!

nathan