32.2 C
Chennai
Monday, May 20, 2024
21 1442820767 1 2 coconutmilk
தலைமுடி சிகிச்சை

முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்கள் முயற்சி செய்திராத சில இயற்கை தீர்வுகள்!!!

முடி கொட்டும் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? அதற்கான சிறந்த மற்றும் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத தீர்வை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மிகவும் சிம்பிளான அதே சமயம், பலரும் முயற்சி செய்து பார்த்திராத சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக ஒரு நாளைக்கு 50-100 முடி கொட்டுவது சாதாரணம். அதற்கு அதிகமானால் மட்டுமே பிரச்சனை தீவிரமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றினால், முடி கொட்டுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

தேங்காய்

முடி உதிர்வதைத் தடுக்க, தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். அல்லது தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து, அதிலிருந்து பால் எடுத்து, இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும் படி தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும்.

வெங்காய ஜூஸ்

வெங்காயத்தில் சல்பர் உள்ளது. இது முடியின் வளர்ச்சிக்கும், நிறத்திற்கும் தேவையான ஒன்று. அத்தகைய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசி, உலர வைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், முடி உதிர்வதை நிறுத்திவிடலாம்.

பூண்டு

பூண்டிலும், வெங்காயத்தைப் போல் சல்பர் அதிகம் உள்ளது. அத்தகைய பூண்டை சிறிது எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, அந்த எண்ணெயை குளிர வைத்து, பின் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

செம்பருத்தி

செம்பருத்தி பூவை அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி சில மணிநேரங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இதன் மூலமும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் பொடி அல்லது சாற்றில், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது குறையும்.

முட்டை

முட்டையில் சல்பர், பாஸ்பரஸ், செலினியம், அயோடின், ஜிங்க் மற்றும் புரோட்டீன் போன்ற முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே அந்த முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
21 1442820767 1 2 coconutmilk

Related posts

வெறும் 30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளரணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பொடுகுத் தொல்லையா?

nathan

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்

nathan

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம்

nathan

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!

nathan

உங்கள் டல்லான கூந்தலில் பூக்கள் மாஸ்க் செய்யும் மேஜிக் பற்றி தெரியுமா?

nathan

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க.

nathan