25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
maravalli kilangu puttu 16 1466072000
சிற்றுண்டி வகைகள்

மரவள்ளிக் கிழங்கு புட்டு

இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோ தேங்காய் – 1 1/2 கப் (துருவியது) உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை துருவிக் கொண்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பின் அதனை பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதற்குள் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்பு புட்டு குழலை எடுத்துக் கொண்டு, அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிது துருவிய தேங்காயைப் போட்டு, பின் சிறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும். பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி!!!

maravalli kilangu puttu 16 1466072000

Related posts

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

டிரை ஃப்ரூட் தோசை

nathan

மட்டன் கபாப்

nathan

ஹெல்த்தி மிக்ஸர்! ஈஸி குக்!

nathan

சத்தான சுவையான சோள அடை

nathan

அரிசி வடை

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan