23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201606131033436936 Tasty nutritious beetroot salad SECVPF
சாலட் வகைகள்

சுவையான சத்தான பீட்ரூட் சாலட்

சுவையான சத்தான பீட்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான பீட்ரூட் சாலட்
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 1
வெங்காயம் – 1
தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு கப்பில் துருவி பீட்ரூட் துருவலை போட்டு அதில் வெங்காயம், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வேர்க்கடலை, பச்சை மிளகாயை தாளித்து பீட்ரூட் கலவையில் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்கவும்.

* கடைசியாக தேங்காய்த் துருவலால் அலங்கரித்துப் பரிமாறவும்.

* சுவையான சத்தான பீட்ரூட் சாலட் ரெடி.201606131033436936 Tasty nutritious beetroot salad SECVPF

Related posts

அச்சாறு

nathan

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

nathan

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

nathan

பஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்

nathan

கேரட் – வெள்ளரி சாலட்

nathan

பூசணிக்காய் பழ ஷேக்

nathan

சுவையான சத்தான தக்காளி சாலட்

nathan