broken wheat upma
சைவம்

கோதுமை ரவை புளியோதரை

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை – ஒரு கப்,
புளிச்சாறு – அரை டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று,
காய்ந்த மிளகாய் (சிறியது) – ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு,
தேங்காய் துருவல் – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கோதுமை ரவையை சிறிதளவு எண்ணெயில் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

• அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய வைத்து, கடுகைப் போட்டு வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

• இதனுடன் கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

• பின்னர் 3 கப் நீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

• அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கோதுமை ரவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.

• மீதமுள்ள எண்ணெயையும் ஊற்றி சிறிது தளற ஆனதும், தேங்காய்த் துருவல் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கிளறவும்.

• பிறகு அடுப்பை அணைத்து, 10 நிமிடத்துக்குப் பின்னர் பரிமாறவும். இதற்கு, தக்காளி சட்னி உகந்தது.

broken wheat upma

Related posts

சுவையான வெங்காயம் தக்காளி குழம்பு

nathan

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

nathan

காளான் பொரியல்

nathan

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

கொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma

nathan

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

nathan

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்

nathan

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

nathan