26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 1432206800 6 bathroomcoverimage
மருத்துவ குறிப்பு

உங்க பாத்ரூம் ‘கப்பு’ அடிக்குதா? அதைப் போக்க சில வழிகள்!!!

மனதை அமைதியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள உதவும் வீட்டில் இருக்கும் சமையலறை, படுக்கை அறை, ஹால் போன்றவற்றை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது. பாத்ரூம்மையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் பாத்ரூம் சுத்தமாக இல்லாவிட்டால், கிருமிகள் நம் உடல் விரைவில் தாக்கி, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் உள்ள குளியலறை மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்கு என்ன தான் ஆசிட், பினாயில் போன்றவற்றைக் கொண்டு பாத்ரூம்மை சுத்தம் செய்தாலும், சில மணிநேரம் கழித்து, மீண்டும் ஒருவித துர்நாற்றத்துடன் இருக்கும். எனவே இந்த துர்நாற்றம் இல்லாமல் இருக்க ஒருசிலவற்றை , அதுவும் மிகவும் சிம்பிளான செயல்களை மேற்கொண்டால் போதும், பாத்ரூம்மை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.

ஜன்னலை திறந்து வையுங்கள

் பாத்ரூம்மை பயன்படுத்தும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் பாத்ரூம்மின் ஜன்னலை திறந்தே வையுங்கள். இதனால் பாத்ரூம்மில் நல்ல காற்றோட்டம் இருந்து, அதன் மூலம் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ரூம் பிரஷ்னர்

நல்ல வாசனை நிறைந்த, அதிலும் உங்களுக்கு பிடித்த வாசனை கொண்ட ரூம் பிரஷ்னரை பாத்ரூம்மில் ஸ்ப்ரே செய்யுங்கள். இதனால் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்மில் ரூம் பிரஷ்னர் தெளித்தால் மட்டும் போதாது. அவ்வப்போது குளியலறை மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய இருக்க வேண்டும். முக்கியமாக பாத்ரூம் பேசின், கமோடு மற்றும் தரையை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

கழிவறைரய சுத்தம் செய்யும் போது, முதலில் 1 கப் பேக்கிங் சோடாவை தூவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தண்ணீர் ஊற்றி தேய்த்தால், கறைகள் எளிதில் நீங்குவதோடு, துர்நாற்றமின்றியும் இருக்கும்.

வோட்கா

3 பங்கு நீரில், 1 பங்கு வோட்கா சேர்த்து, அத்துடன் சிறிது யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ரூம் ஸ்ப்ரே போன்று பயன்படுத்தலாம்.

நறுமணமிக்க மெழுகுவர்த்தி

பாத்ரூம்மில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை விரைவில் போக்க நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை ஏற்றினால், பாத்ரூம்மானது நறுமணம் கமழும்.

வினிகர்

ஆண்கள் பலர் கழிவறையில் சிகரெட் பிடிப்பார்கள். அப்படி கழிவறையில் சிகரெட் பிடித்தால், அதுவே கழிவறையில் மிகுந்த நாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி நாறும் கழிவறையில் வெள்ளை வினிகரை ஊற்றி, கழிவறையின் ஜன்னலை திறந்துவிட்டால், அது கழிவறையில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.
21 1432206800 6 bathroomcoverimage

Related posts

ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில கைவைத்தியங்கள் !

nathan

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு

nathan

கீரை டிப்ஸ்..

nathan

ஆஸ்துமாவை குணமாக்கும் கிராம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா குப்பைமேனி இலையை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்..!!

nathan

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

nathan

உடல் உஷ்ணத்தை தணிக்கும் கோவைக்காய்

nathan

உங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்!!!

nathan

மாதவிடாயின் போது வயிறுவலியால் அவதிப்படுகிறீர்களா? சூப்பரா பலன் தரும்!!

nathan