201606110847179746 Preventing blood vessels form in the fat
ஆரோக்கிய உணவு

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை

தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும்.

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை
ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds) .

‘ஃப்ளெக்ஸ் சீட்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்று அர்த்தம்.

இதனுடைய பயன்கள் அளவிட முடியாதவை. தமிழில் ஆளி விதை எனப்படும் இந்த விதை தெலுங்கில் ‘அவிஸி கிற்சலு’, மலையாளத்தில் ‘செருவுசான வித்து’, கன்னடத்தில் ‘அகஸி’, ஹிந்தியில் ‘அல்ஸி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் இடாஸி. ஆனால், நம் நாட்டில் ‘லின் சீட்ஸ்’ என்பதே ஆங்கிலத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது பலரும் பெயர் தெரியாததால் வேற்றுநாட்டு மொழியில் கூறப்பட்டதையே ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.

100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்

புரதச்சத்து – 20.3 கிராம்
கொழுப்பு – 37.1 கிராம்
நார்ச்சத்து – 40.8 கிராம்
மாவுச்சத்து- 28.9 கிராம்
சக்தி – 530 கி.கலோரிகள்
கால்சியம் – 170 மி.கிராம்
பாஸ்பரஸ் – 370 மி.கிராம்
இரும்புச்சத்து – 2.7 மி.கிராம்

இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் – ஏ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன. இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.

நமது ஆரோக்கியத்தில்ஆளி விதையின் பங்கு

* இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.

ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ‘லிக்னன்’ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.

* பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில் ‘ஹாட் ஃப்ளஷஸ்’ என்று கூறுவர். உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர்.

இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.

* இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.

* இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

* தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.201606110847179746 Preventing blood vessels form in the fat

Related posts

உங்களுக்கு தெரியுமா பூண்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் பயன்படுத்தலாம்

nathan

தினமும் வறுத்த ஓமம் விதைகளை சூடான நீரில் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்!

nathan

தெரிந்துகொள்வோமா? ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

கீரையில் உள்ள எண்ணற்ற சத்துக்கள்

nathan

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனையை போக்க இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது?

nathan