24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
N2U1An8
சரும பராமரிப்பு

வெயிலில் விளையாடுவதால் சருமம் கருப்பாகுமா?skin care tips

வெயிலில் விளையாடும் குழந்தைகளின் சருமம் கருக்குமா? அதற்காக அவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். அப்போதுதான் வைட்டமின் டி குறைபாடு வராமல் இருக்கும். காலை வெயிலும் மாலை வெயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஏற்றவை. 12 மணி முதல் 3 மணி வரையிலான வெயிலைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.பள்ளிக்கூடங்களில் இந்த 12- 3 மணி நேரத்தில் விளையாட்டு பீரியட் இருந்தால் அப்போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கச் சொல்லி குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பலாம்.

வெயிலில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக இதைத் தடவிக் கொள்ள வேண்டும். சில முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளுக்கான பிரத்யேக சன் ஸ்கிரீன் கிடைக்கிறது. கடைகளில் நீங்களாகவே சன் ஸ்கிரீன் வாங்கிக் குழந்தைகளுக்கு உபயோகிக்காதீர்கள். அதில் இருக்கும் கெமிக்கல் அவர்களது சருமத்துக்குப் பாதுகாப்பானதா எனத் தெரியாது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கவும்.

இது தவிர தலைக்குத் தொப்பி, முழுக்கை சட்டை போன்றவற்றையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம். வாய்வழியாக எடுத்துக் கொள்கிற சன் ஸ்கிரீன் இன்னும் சிறந்தது. வாய்வழி சன் ஸ்கிரீன் என நான் குறிப்பிடுவது ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள். குறிப்பாக ஆரஞ்சு நிறத்தில் உள்ள அனைத்தும். பப்பாளி, ஆரஞ்சு, கேரட், பரங்கிக்காய், தக்காளி போன்ற அனைத்தும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் சூரியனின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

நெல்லிக்காய், சாத்துக்குடி, பிரக்கோலி, கீரை போன்றவையும் இதே போன்று உதவும். இவை தவிர சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.வெயிலில் விளையாடி விட்டு வந்ததும் குழந்தைகளை உடலில் அழுக்கும் வியர்வையும் நீங்கக் குளிக்கச் செய்ய வேண்டும். உடலில் வியர்வை தங்கினால் ஃபங்கல் இன்ஃபெக் ஷன் வரும். அதன் மூலம் தேமல், படர்தாமரை போன்றவை வரலாம். குளித்ததும் உள்ளாடை முதல் உடை வரை எல்லாவற்றையும் மாற்றச் சொல்ல வேண்டியதும் அவசியம்.N2U1An8

Related posts

கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்க வேண்டுமா?

nathan

தோல் பளபளக்க…

nathan

உடலை அழகு படுத்த உபயோகப் படுத்தும் சில இயற்கை-மூலிகைகள்:

nathan

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை பராமரிப்பது எப்படி?

sangika

வேனல் கட்டிகள் மறைய எளிய வைத்தியம்… சம்மர் டிப்ஸ்!

nathan

கருமையான அக்குளை வெள்ளையாக்கும் பத்து இயற்கை முறைகள்

nathan

கழுத்தில் படரும் கருமை

nathan

சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை

nathan

என்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமா?

nathan