30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை…

எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

* நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….

* சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF – Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 spf யூஸ் பண்ணுங்க

* முகத்துக்கு மட்டும் இல்லைங்க வெயில்படும் எல்லா இடங்களையும்(கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் அப்ளை செய்யுங்க.

* சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் நீங்க வெளியில போகணும்.

* என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்க பாருங்க. தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன்களையே பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் எனப் பரிசோதித்து வாங்குங்கள்.

Related posts

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika

முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிர மஞ்சள் ஃபேஷ் பேக்…

nathan

இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்

nathan

உங்களின் உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்….

sangika

இளமையுடன் இருக்க… எலுமிச்சை!….

sangika

கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

nathan

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

nathan

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

nathan

கணவருடன் மோசடி வழக்கில் சிக்கிய சன்னி லியோன்..நீதிமன்றம் உத்தரவு!

nathan