25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
13 1460531428 7 oatmeal
கால்கள் பராமரிப்பு

உங்கள் கால்களில் துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

தற்போது வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று தான் வியர்வை. என்ன தான் வியர்வை ஒரு மணமற்ற திரவமாக இருந்தாலும், இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.

அதிலும் கால்களில் ஷூ போடுபவர்களின் பாதங்களை எடுத்துக் கொண்டால், எலி இறந்து போன நாற்றம் வீசும். இதனைத் தடுக்க தினமும் ஒருசில செயல்களை மாலையில் வீடு வந்ததும் செய்தால் போதும்.

இங்கு பாதங்களில் வியர்வையினால் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை

1/2 வாளி நீரில் 1/4 கப் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, அக்கலவையில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

வினிகர்

வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு 1/2 கப் வினிகரை 8 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, பாதங்களை அந்நீரில் 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

லாவெண்டர் எண்ணெய்

1/2 வாளி நீரில் சில துளிகளில் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலந்து, 15-20 நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.

படிகாரம்

1/2 வாளி வெதுவெதுப்பான நீரில் சிறிது படிகாரத்தைப் போட்டு, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் கால்களில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.

ஐசோப்ரோபைல் ஆல்கஹால் மற்றும் சர்க்கரை

இது மிகவும் பிரபலமான ஓர் முறை. அது 1/4 கப் ஐசோப்ரோபைல் ஆல்கஹாலில், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அக்கலவையைக் கொண்டு கால்களை 10-15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, பாத துர்நாற்றம் தடுக்கப்படும்.

கல் உப்பு மற்றும் தண்ணீர்

1 கப் கல் உப்பை 10-12 கப் நீரில் போட்டு, அந்நீரில் பாதங்களை 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறுவதோடு, துர்நாற்றமும் தடுக்கப்படும்.

ஓட்ஸ் ஸ்கரப்

2 டீஸ்பூன் ஓட்ஸை 1 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, பாதங்களை 15-20 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ, பாதங்கள் சுத்தமாகி, துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படும்.

13 1460531428 7 oatmeal

Related posts

இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்!…

sangika

பாதவெடிப்பு பிரச்னைக்கான தீர்வு..முயன்று பாருங்கள்

nathan

பாத வெடிப்பில் இருந்து விடுபட…

nathan

பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..

sangika

குதிகால் வெடிப்பை மறைய செய்யும் வீட்டு வைத்தியம்

nathan

தொடைகளில் உருவாகும் செல்லுலைட்டை போக்க வீட்டிலேயே அருமையான சிகிச்சை!!

nathan

உங்கள் பாதங்களில் சன் டேன் இருக்கிறதா? அப்போ இத ட்ரை பண்ணுங்க !!

nathan

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika