என்னென்ன தேவை?
இஞ்சி -1 டேபிள்ஸ்பூன் (மெல்லியதாக நறுக்கியது),
கார்ன் ஃப்ளோர்-2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் -2 (பொடியாக நறுக்கியது),
பூண்டு -1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
தக்காளிச்சாறு -1/2 கப்,
வெண்ணெய் -2 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத் தூள் -தேவைக்கேற்ப,
தண்ணீர் -2 அல்லது 3 கப்.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி, காய்ந்த மிளகாய், பூண்டு மூன்றையும் நன்றாக வதக்கவும். நன்கு வதக்கிய பின்பு அதில் கார்ன் ஃப்ளோர் சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு தண்ணீர், தக்காளிச்சாறு ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு பின் அதில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து பரிமாறவும்.