என்னென்ன தேவை?
நார்த்தம்பழம் – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்),
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப,
சேமியா – 1 கப்,
ரவை – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 3,
எண்ணெய் – தேவைக்கு,
வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி (பொடியாக அரிந்தது) – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது),
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை -1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க…
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு சேமியாவையும், ரவையையும் தனித்தனியே வாசனை வரும் வரை குறைந்த தணலில் வதக்கவும். கடா யில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டு தாளிக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பெருங்காயம், வறுத்த வேர்க்கடலை சேர்த்து உப்பு போட்டு கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு மஞ்சள் தூள், நார்த்தம் பழச்சாறு சேர்க்கவும். கொதிக்கும் போது 1 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.பிறகு வறுத்த சேமியா சேர்த்து கிளறி பாதி வெந்ததும், வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும். குறைந்த தணலில் அடுப்பை வைத்து, மூடி வைத்து நன்கு வேக விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இதை அப்படியே தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். அல்லது கொழுக்கட்டை நடுவே பூரணமாக வைக்கலாம். அல்லது இதையே கொழுக்கட்டை மாதிரி பிடித்து 5 நிமிடம் ஆவியில் வேக விட்டும் எடுக்கலாம். வித்தியாசமான ரெசிபியாக இருக்கும். காய்கறி கலவைகள் சேர்த்தும் செய்யலாம்.