26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
uViCiqq
சூப் வகைகள்

ஓட்ஸ் சூப்

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 1/4 கப்,
தண்ணீர் – 1/2 கப்,
பால் – 2 கப்,
ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்,
கேரட் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
பூண்டு – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 சிட்டிகை,
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது),
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்னர் அதில் கேரட் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அப்போது ஓட்ஸில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், அதில் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, பின் தேவையான அளவு உப்பு, உலர்ந்த கற்பூரவள்ளி இலை, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், ஓட்ஸ் சூப் ரெடி!!!
uViCiqq

Related posts

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

மட்டன் சூப்

nathan

கொண்டைக்கடலை சூப்

nathan

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

தேங்காய் பால் சூப்

nathan

மக்காரோனி சூப்

nathan

கிரீன் கார்டன் சூப்

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

nathan