26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
ஆரோக்கியம் குறிப்புகள்

தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?

இரவு நல்ல தூக்கம் வர வேண்டும் என்றால், குளித்துவிட்டு தூங்கலாம், உடல் சோர்வு விலகி உடல் இலகுவாக இருக்கும். இதனால், படுத்ததும் உறக்கம் வந்துவிடும் என்று கூறுவது உண்டு. ஆனால், குளித்துவிட்டு, மேக்-அப் செய்துக்கொண்டு தூங்கும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், அதுவல்ல பிரச்சனை, இரவு தூங்கும் போது உள்ளாடை / பிரா அணிந்து தூங்கலாம? இல்லையா?

இது சிலருக்கு, அசௌகரியமாகவும் இருக்கும். ஆனால், சில பெண்கள் உள்ளாடை அணியாமல் உறங்கினால், மார்பகங்களின் வடிவம் மாறிவிடுமோ என்று அஞ்சுவதும் உண்டு. பல பெண்களின் மனதை அரித்துக்கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன…..?

இறுக்கமாக அணிவதை தவிர்க்க வேண்டுமாம்

சில பெண்கள் இறுக்கமாக பிரா அணிந்தால், அவர்களது வடிவம் நன்கு இருக்கும் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறு. இதனால், சுவாசிக்க பிரச்சனையாக தான் இருக்கும். அதிலும், உறங்கும் போதும் இறுக்கமாக பிரா அணிந்தால் நிச்சயம் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

சௌகரியமாக அணியுங்கள்

இரவு தூங்க போகும் போது, உங்கள் கையை மேலுயர்த்தி பாருங்கள், பிரா இறுக்கமாக, பிடித்தார் போல் இல்லாது, சௌகரியமாக இருக்குமளவு அதை அட்ஜஸ்ட் செய்து அணியுங்கள் என்று கூறுகிறார்கள்.

காட்டன் துணியை பயன்படுத்துங்கள்

தற்போது நிறைய ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் டிசைனாக இருக்க வேண்டுமென, நிறைய ரகங்களில் பிரா வடிவமைக்கப்படுகிறது. ஆனால், காட்டன் துணியில் தயாரித்த பிரா அணிவது தான் சிறந்தது. இது, வெப்பம் மற்றும் குளிர் என இரு நிலைகளிலும், மார்பகங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

இரத்த ஓட்டத்தை பாதிக்கும்

மிகவும் இறுக்கமாக உள்ளாடை அணிந்து உறங்கும் போது, அது, சீரான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். அதனால் கூட தூக்கம் வராமல் போகலாம் அல்லது அசௌகரியமான உணர்வு ஏற்படலாம். எனவே, மிகவும் இறுக்கமாக உள்ளாடை அணிந்து தூங்க வேண்டாம்.

தவறான சைஸ்

பல பெண்கள் தங்களுக்கு சரியாக பொருந்தாத, தவறான சைஸில் தான் பிராக்கள் அணிகின்றனர் என்றும், இதனால், அவர்களுக்கு சரும பிரச்சனை, சீரான இரத்த ஓட்டமின்மை, சுவாசக் கோளாறுகள், நீண்ட நேரம் நடக்க முடியாமல் போவது போன்ற பிரச்சனைகள் எழுகிறதாம்.

நல்ல உறக்கத்திற்கு தீர்வு

பெண்களுக்கு நல்ல உறக்கம் வேண்டுமெனில், இதில் அதிக முக்கியத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இறுக்கமாக மட்டுமல்ல, மிகவும் லூசாகவும் உள்ளாடை அணிவதும் தவறு, இதுவும் அசௌகரியமான உணர்வினை தரவல்லது தான்.
10 1436526023 5shouldyouwearbrawhileyousleep

Related posts

இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்

nathan

தெரிஞ்சிக்கங்க…தவறான உறவில் இருக்கிறீர்களா..? 10 அறிகுறிகள் இதோ!

nathan

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

nathan

தெரிந்துகொள்வோமா? மாம்பழம்: சத்துக்களும்… நன்மையும்…

nathan

இது தான் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று சொல்வாங்களா?

nathan

குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! …..

sangika

சிறந்த திருமண பொருத்தம்

nathan

நடிகை மஹிமா நம்பியார் தன் டயட் கான்சியஸ்!

nathan