22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
sl3686
இனிப்பு வகைகள்

லாப்சி அல்வா

என்னென்ன தேவை?

கோதுமை ரவை/பாம்பே ரவை/சம்பா ரவை ஏதேனும் ஒன்று – 1 கப்,
சர்க்கரை – 2 முதல் 2 1/2 கப்,
நெய் – 1 கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
தண்ணீர் – 5-6 கப் அல்லது தேவைக்கு,
அலங்கரிக்க முந்திரி, உலர்திராட்சை, பாதாம், பிஸ்தா (விருப்பத்திற்கு).
எப்படிச் செய்வது?

சிறிது நெய்யில் முந்திரி, உலர் திராட்சை, பாதாம்/ பிஸ்தா ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மீண்டும் சிறிது நெய் சேர்த்து ரவையை நல்ல சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும். பின் இறக்கி வைக்கவும். வேறு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து ரவையை கொட்டி கைவிடாமல் நன்றாக கிளறி வேக விடவும். இது நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

அவ்வப்போது மீதி இருக்கின்ற நெய்யையும் சேர்க்கவும். இந்தக் கலவை நல்ல அல்வா பதம் வரும் போது வறுத்த முந்திரி, நட்ஸை பாதி பாகத்தை சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இது நல்ல அல்வா பதம் வந்ததும் தேவைப்பட்டால் நெய், மீதி உள்ள நட்ஸ் சேர்த்து தூவி கிளறி இறக்கவும். சப்புக் கொட்ட வைக்கும் அல்வா தயார்.sl3686

Related posts

சுவையான ஜிலேபி,

nathan

மினி பாதாம் பர்பி

nathan

இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி

nathan

மைசூர் பாகு செய்ய.!!

nathan

சுவைமிக்க வட்டிலாப்பம் தயாரிக்கும் முறை

nathan

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு

nathan

ரவா லட்டு செய்வது எப்படி

nathan

குலோப் ஜாமுன்

nathan

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan