28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201606011417026082 how to make Paneer Bonda SECVPF
சிற்றுண்டி வகைகள்

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

பன்னீர் போண்டா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

பூரணத்துக்கு :

துருவிய பன்னீர் – 1 கப்
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1\2 டீஸ்பூன்
பொடித்த மசாலா (பட்டை, லவங்கம், ஏலக்காய்) – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1\4 கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மேல் மாவுக்கு :

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1\4 கப்
ஓமம் – 1\4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1\2 டீஸ்பூன்
சமையல் சோடா – 1\4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டைப் போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

* நன்றாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். தேவைப்பட்டால் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

* காய்கள் சுருள வதங்கியதும், உப்பு, மிளகாய்த்தூள், பன்னீர் சேர்த்து நன்கு வதக்கி தனியாத்தூள், பொடித்த மசாலாத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கினால் பூரணம் ரெடி! ஆறியதும் பூரணத்தை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் மேல் மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

* உருட்டிய பூரண உருண்டைகளை மாவில் தோய்த்தெடுத்து காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

* சுவையான பன்னீர் போண்டா ரெடி.201606011417026082 how to make Paneer Bonda SECVPF

Related posts

வாழை இலை கொழுக்கட்டை

nathan

உருளைக் கிழங்கு அப்பம்

nathan

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

செங்கோட்டை பார்டர் புரோட்டா

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் அரிவு மாவு சீடை

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி

nathan

கறி தோசை : செய்முறைகளுடன்…!

nathan