சுவையான சத்தான கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்
தேவையான பொருள்கள் :
கறிவேப்பிலை – 1 கப்
மிளகு – 1 தேக்கரண்டி
மணத்தக்காளி வற்றல் – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடலைபருப்பு – 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி – தேவையான அளவு
புளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
செய்முறை :
* புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
* மிளகு, உளூத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் புளி கரைசலுடன் அரைத்த விழுது, மஞ்சள் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றலை போட்டு தாளித்த பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
* குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் ஓரங்களில் வந்து பக்குவம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
* மணத்தக்காளிக்குப் பதில் சுண்டைக்காய் வற்றலும் போடலாம்.