masala fish fry 28 1464425988
அசைவ வகைகள்

காரமான மசாலா மீன் வறுவல்

தற்போது பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருப்பதால், சிக்கன் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மாறாக விடுமுறை நாட்களில் மீன்களை சமைத்து சாப்பிடுங்கள். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான மீன் சமையலைக் கொடுத்துள்ளோம். அது தான் மசாலா மீன் வறுவல்.

சரி, இப்போது அந்த மசாலா மீன் வறுவலை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மீன் – 250 கிராம் (முள் இல்லாதது) தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு…

சின்ன வெங்காயம் – 3 இஞ்சி – 2 இன்ச் பூண்டு – 6 பற்கள் கறிவேப்பிலை – சிறிது மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் வறுவல் ரெடி!!!masala fish fry 28 1464425988

Related posts

இறால் சில்லி 65

nathan

சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி

nathan

சுவையான கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா

nathan

இறால் வறுவல்: செய்முறைகளுடன்…!

nathan

சுவையான சில்லி சிக்கன் செய்வது எப்படி | How To Make Chilli Chicken Recipe

nathan

மட்டன் சுக்கா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65

nathan

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

nathan