25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201605311116158936 how to make rice vegetable balls SECVPF
சைவம்

ரைஸ் வெஜ் பால்ஸ் செய்முறை விளக்கம்

சாதத்தை கொண்டு எளிய முறையில் சுவையான ரைஸ் வெஜ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரைஸ் வெஜ் பால்ஸ் செய்முறை விளக்கம்
ரைஸ் வெஜ் பால்ஸ்

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் – 2 கப்
கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 2
கார்ன் ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வடித்த சாதத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

* கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த சாதம் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் போட்டு கொட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். மாவு தளர்வாகி விட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் கலந்து வைத்த கலவையை உருண்டைகளாக பிடித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* சூடான ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.

* தக்காளி சாஸுடன் பரிமாறவும்.201605311116158936 how to make rice vegetable balls SECVPF

Related posts

குதிரைவாலி எள் சாதம்

nathan

ஃபிரைடு ரைஸ்

nathan

சுவையான பன்னீர் ரோஸ்ட்

nathan

எள்ளு சாதம்

nathan

வறுத்தரைத்த மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி

nathan

ஓம மோர்க் குழம்பு

nathan

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

அரைத்து விட்ட வெங்காய சாம்பார்

nathan

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

nathan