சத்தான கேரட் இஞ்சி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான கேரட் இஞ்சி சூப் செய்முறை விளக்கம்
CARROT GINGER SOUP
தேவையான பொருட்கள் :
கேரட் – 100 கிராம்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பல்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகு தூள், உப்பு – தேவைக்கு
கொத்தமல்லிதழை, புதினா இலை – தேவைக்கு
செய்முறை :
* கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கேரட், இஞ்சி, பூண்டை துருவிக்கொள்ளவும்.
* குக்கரில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் துருவிய கேரட், இஞ்சி போட்டு 2 விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
* ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* கேரட் விழுதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் துருவிய பூண்டை போட்டு தாளித்த பின் அரைத்து வைத்துள்ள கேரட் கலவையை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சூப் கொதித்து பக்குவம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள மிளகு தூள், கொத்தமல்லி, புதினாவை போட்டு இறக்கவும்.
* சுவையான சத்தான கேரட் இஞ்சி சூப் ரெடி.