சுவையான உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – அரை கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
பெருஞ்சீரகம் – சிறிதளவு
மசாலா செய்வதற்கு :
உருளைக்கிழங்கு – 150 கிராம்,
கேரட் – 1,
உப்பு – தேவைக்கேற்ப,
பெரிய – வெங்காயம்,
பச்சை மிளகாய் – தலா 2,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
* உருளைக்கிழங்குடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து ஒன்றும் பாதியாக மசித்து வைக்கவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் கேரட் துருவல் சேர்த்துக் கிளறி, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.
* கடைசியாக கொத்தமல்லி சேர்த்து, ஆறியதும் பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
* கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாகக் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடனாதும் செய்து வைத்த உருண்டைகளை, இந்தக் மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ரெடி.