இயற்கையின் வரமான மங்குஸ்தான் கண்களை பாதுகாப்பதுடன், உடல் வெப்பத்தையும் தணிக்கிறது.
20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது மங்குஸ்தான் மரம். ‘குளுசியாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா.
எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் இப்பழத்தில் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.
பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.
மங்குஸ்தானின் மகத்துவங்கள்
மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கு குறையும்.
கோடை காலத்தில் மங்குஸ்தான் ஜூஸை அருந்துவதன் மூலம், வெப்பம் தணிந்து நம் உடல் குளிச்சியுடன் இருக்கும்.
சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதை மூலம் அசுத்த நீர் வெளியேறிவிடும்.
இதை சாப்பிட்டால் மனநிலை சரியில்லாதவர்களுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் இருக்க உதவும்.